உலக அளவில் பாதுகாக்கப்பட்ட தமிழ் நூல்கள் / இதழ்களுக்கான விரிவான பட்டியல்.
அன்புடையீர், வணக்கம்.

தமிழ்க்கனல் -- இரா. மோகனசுந்தரம். தமிழம்.வலை

தமிழம்.வலையின் இந்த இணைப்பு வழியாக உலகஅளவில் படவடிவக் கோப்புகளாகச் சேகரிக்கப்பட்ட தமிழ் நூல்கள் / இதழ்களின் பட்டியல் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தப் பட்டியல் தற்பொழுது நான்கு நாள்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. ஏன் இந்தப் பட்டியல் ?

இந்தப் பட்டியலில் விடுபட்ட நூல்கள் உங்களிடம் இருந்தால் அருள்கூர்ந்து அவற்றைப் பாதுகாக்க முயற்சி எடுக்கவும். விரும்பினால் அவற்றைப் படவடிவக் கோப்புகளாக்கி உங்களுக்குத் தரவும் காத்திருக்கிறோம். தமிழில் வெளிவந்த அனைத்து நூல்களும்/ இதழ்களும் படிவடிவக் கோப்புகளாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குப் பயனாகவேண்டும் என்ற எங்களின் கருத்தோடு இணைந்த நண்பர்கள் பழைய புத்தகக் கடைகளிலோ, நண்பர்களிடமோ தமிழ் நூல்கள்/ இதழ்களைத் திரட்டி, படவடிவக்கோப்புகளாக்க உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்,

. உலக அளவில் இணையத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழ் நூல்களுக்கான பொதுப் பட்டியலை இந்த இணைப்பில் காணலாம். பட்டியலிலுள்ள நூல்களை அகரவரிசையில் தேடலாம். நூல் பெயர், நூலாசிரியர் பெயர், மின்நூலாக்கம் செய்த தளம் என்று காணவேண்டியதைத் தேர்ந்தெடுத்து, ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடலாம். மேலும் பட்டியலின் தலைப்பையும் அகரவரிசைப் படுத்தலாம். பட்டியலின் எண்ணிக்கையில் மாற்றம் செய்தும் தேடலாம்.
.. உலக அளவில் இணையத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழ் இதழ்களுக்கான பொதுப் பட்டியலை இந்த இணைப்பில் காணலாம். இந்தப் பட்டியலின் இதழ்களை அகரவரிசையில் தேடலாம். இதழ் பெயரை ஒருங்குறியில் தட்டச்சு செய்தும் தேடலாம். மேலும் பட்டியலின் தலைப்பு வழியாகவும் அகரவரிசைப்படுத்தித் தேடலாம். பட்டியலின் எண்ணிக்கையை விரும்புகிற அளவிற்கு மாற்றம் செய்தும் தேடலாம்.

பட்டியலில் விடுபட்ட இதழ்களையும் நூல்களையும் தேடித் தொகுக்க எம்மோடு இணையவும். பேச 9788552061